மெய்ப்பொருள் காண்பது அறிவு

2020 ஆம் ஆண்டுக்கான உலகின் புத்தாக்கமான நிறுவனங்கள் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்த HUAWI

- Advertisement -

புரட்சிகரமான மொபைல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் HUAWI நிறுவனமானது, புகழ்பூத்த பொஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் (BCG) 2020 ஆம் ஆண்டுக்காக உலகின் புத்தாக்கமான 50 நிறுவனங்களின் பட்டியலில் 42 இடங்கள் முன்னேறி தற்போது 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

BCG இன் 2020 ஆம் ஆண்டுக்காக பட்டியலின் முதல் 6 இடங்களில் Apple, Alphabet, Amazon, Microsoft  மற்றும் Huawei ஆகிய உலகப்புகழ்பெற்ற வர்த்தகநாமங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து Alibaba, IBM, Sony மற்றும் Facebook வர்த்தக நாமங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உலகின் முன்னணி தொலைத்தொடர்பு சாதனங்களின் வழங்குனர் என்ற வகையில், Huawei தனது வருடாந்த வருவாயில் 10% க்கும் அதிகமான பங்கினை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கென தொடர்ச்சியாக ஒதுக்கி வருகின்றது. 2019 ஆம் ஆண்டில் இந்தத் தொகையானது 131,659 மில்லியன் யுவான்களாக கணக்கிடப்பட்டதுடன், அது Huawei இன் மொத்த வருவாயில் 15.3% ஆகக் காணப்படுகின்றது.

5G தொழில்நுட்பத்தினைப் பொறுத்த வரையில், கடந்த பத்து ஆண்டுகளில் மாத்திரம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை Huawei முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. புரட்சிகரமான 5G தொழில்நுட்பத்தினைப் பிரபல்யப்படுத்தும் முகமாக உலகளாவிய ரீதியில் 5G புத்தாக்க மையங்களையும் Huawei நிறுவியுள்ளது.

COVID-19 பரவலைத் தடுக்கும் முகமாக Huawei புத்தாக்கமான முயற்சிகளை முன்னெடுத்து வருவதுடன், செயற்கை நுண்ணறிவு (AI), தொலை அலுவலகம், ஸ்மார்ட் ஹெல்த்கெயார் மற்றும் ஒன்லைன் கற்கை போன்ற துறைகளின் அபிவிருத்திக்குக் கணிசமான பங்களிப்பினை வழங்குகிறது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) மூலமான நோய் கண்டறிதலானது CT ஸ்கேன் முடிவுகளை சில நொடிகளிலேயே நிரல்படுத்துவதன் வாயிலாக COVID-19 தொற்றினை இனங்காண்பதற்கு வழிவகுக்கின்றது.

‘BCG இன் புத்தாக்கமான நிறுவனங்களின் 14வது அத்தியாயம் தொடர்பான எமது ஆராய்ச்சிகள் COVID-19 பரவலுக்கும் முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டிருந்தன. வாடிக்கையாளர்களிடமிருந்தான தரவுகள் எமது தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக அமைந்ததுடன், தற்போதைய காலகட்டத்தில் உலகின் முன்னணி புத்தாக்கமான நிறுவனமென்ற வகையில் வழங்கல், சந்தைக் கேள்வி, வாடிக்கையாளர்களின் நுகர்வுப் பழக்கவழக்கங்கள் மற்றும் பேண்தகு நிலை வியாபாரம் தொடர்பான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது’ என்று BCG இன் பிரதிநிதி அண்மையில் தெரிவித்தார்.

Huawei இலங்கையின் அனைத்து முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் தனது சேவைகளை வழங்கி வருகின்றது. தொடர்பாடல் வலையமைப்பு, தகவல் தொழில்நுட்பம், ஸ்மார்ட் கருவிகள் மற்றும் கிளவுட் தரவு சேமிப்பு வசதிகள் போன்ற துறைகளில் ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகளை வழங்குவதன் வாயிலாக, தனிநபர்கள், இல்லங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதன் மூலம் இலங்கை முழுவதையும் இணைப்பதற்கு Huawei உதவுகிறது.

புத்தாக்கமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக இலங்கையில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தவும், தகவல் தொழில்நுட்பம் வாயிலாக சுகாதாரம், பேண்தகு அபிவிருத்தி, மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு, சுயஉரிமை மற்றும் வியாபரங்களுக்கு நட்புறவான சூழலை உருவாக்குவதற்கும் Huawei துணைநிற்கின்றது.

இலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் திகழும் Huawei பொறுப்புவாய்ந்த நிறுவனமென்ற வகையில் இலங்கையில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்துவதற்கு கணிசமானளவு பங்களிப்பினை வழங்கி வருகிறது.

இதன் மூலம் இலங்கை நீண்ட கால அடிப்படையிலான சமுக, பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடையவும் பேண்தகு அபிவிருத்தியின் வாயிலாக மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கும் முடிகிறது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்கத் தீர்மானம்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வை எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அமர்வு ஆரம்பமாகும் நேரம் குறிப்பிடப்பட்ட வர்த்தமானி...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகனுக்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது நபர் ஒருவரை பணம் கேட்டு அச்சுறுத்தியமை மற்றும் நபர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மாலக்க சில்வா...

புதிய அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனஞ் செலுத்த வேண்டியவை!

புதிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இரண்டு விடயங்கள் குறித்து விசேட கவனஞ் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் புதிய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பான விடயங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 638 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் குணமடைந்ததை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2...

லெபனானிற்கு நிவாரணங்களை அனுப்பி வைப்பதற்கு தீர்மானம்!

லெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தை அடுத்து லெபனான் நாட்டிற்கு நிவாரணங்களை அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 200 இற்கும் அதிகமானவர்கள்...