மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று : ஹொங்கொங்கில் சமூகப் பரவல்!

- Advertisement -

ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலடைந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பொது மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு ஹொங்கொங்  அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது.

- Advertisement -

அத்துடன், ஹொங்கொங்கில் பாதுகாப்பு முகக் கவசங்களை அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் ஹொங்கொங்கில் உள்ள  அனைத்து உணவகங்களையும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விதிமுறைகள் பல அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 885 ஆக அதிகரித்துள்ள நிலையில், 23 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட  புலம்பெயர்த் தொழிலாளர்களில் 65 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Maltese கடற்படையினரால் மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து 95 புலம்பெயர்த் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இதில் 65 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை,  மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட  புலம்பெயர்த் தொழிலாளர்கள் அனைவரும் Eritrea, Morocco மற்றும் Sudan ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இரத்தினபுரி மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை மும்முரம்

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பிக்கப்படடுள்ள நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் மக்கள்  வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் மேலும் இரத்தினபுரி...

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பம்

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது. இன்று காலை 7 மணிக்கு பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் 12...

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மித்தது!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 849 உயிரழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து எண்ணூற்று...

அமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km  வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...