மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரித்தது – இன்றைய நிலவரம்!

- Advertisement -

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

- Advertisement -

இதேவேளை, 16 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 333 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், 86 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் கண்காணிக்க்படப்டு வருகின்றனர்.

அத்துடன், 470  பேர் தொடந்தும் வைத்தியசாலைகளில் இருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை, பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகத்தை தற்காலகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லங்காபுர பிரதேசசெயலகதின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லங்காபுர பிரதேசசெயலக பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் குறித்த நோயாளர் அடையாளம்காணப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த நபர் பயணம் செய்த இடங்கள் மற்றும் தொடர்புகளை பேணிய நபர்களை அடையாளம் காணும்நடவடிக்கைகள் முன்னெடுக்கபபட்டு வருகின்றது.

இதன்படி, குறித்த நபரிடம் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணையில், லங்காபுர பகுதியில் உள்ள பொலிஸ் நிலையம், வங்கி மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை ஆகியவற்றிற்கு அவர் கடந்த நாட்களில் சென்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த இடங்களுக்கு வந்துசென்ற மற்றும் கொரோனா தொற்றாளருடன் தொடர்புகளை வைத்திருந்த நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துகொண்ட  21 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பூஸ்ஸ மற்றும் கற்பிட்டி கடற்படைத் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இன்று மற்றும் நேற்று ஆகிய தினங்களிலேயே இவ்வாறு இவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

பூஸ்ஸ கடற்படைத் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 15 பேரும்  கற்பிட்டி கடற்படைத் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 6 பேரும் குறித்த காலப்பகுதியில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பூஸ்ஸ கடற்படைத் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் 61 பேரும்,  கற்பிட்டி கடற்படைத் தனிமைப்படுத்தல் நிலையத்தில்  18 பேரும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இரத்தினபுரி மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை மும்முரம்

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பிக்கப்படடுள்ள நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் மக்கள்  வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் மேலும் இரத்தினபுரி...

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பம்

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது. இன்று காலை 7 மணிக்கு பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் 12...

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மித்தது!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 849 உயிரழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து எண்ணூற்று...

அமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km  வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...