மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றமைக்கான ஆதாரம் இல்லை – விசாரணைகளை நிறைவு செய்ய தீர்மானம்

- Advertisement -

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது, ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை நிறைவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை பெறப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றமைக்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -

அத்துடன், இது தொடர்பான அறிக்கை இன்றைய தினம் பதில் பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன மேலும் கூறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது, இலங்கை அணி இந்தியாவுக்கு போட்டியை பணத்துக்காக விட்டுக் கொடுத்ததாக மஹிந்தானந்த அலுத்கமகே கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, இது தொடர்பில் மஹிந்தானந்த அலுத்கமகேவிடம், விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவு வாக்குமூலம் பெற்றது.

அத்துடன், அப்போதைய தேர்வுக் குழுத் தலைவரான அரவிந்த டி சில்வா மற்றும் உபுல் தரங்க, சங்கக்கார ஆகியோரிடமும், விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவு வாக்குமூலங்களைப் பெற்றிருந்ததது.

எனினும், ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றமைக்கான போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையிலேயே, விசாரணைகளை நிறைவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்கத் தீர்மானம்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வை எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அமர்வு ஆரம்பமாகும் நேரம் குறிப்பிடப்பட்ட வர்த்தமானி...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகனுக்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது நபர் ஒருவரை பணம் கேட்டு அச்சுறுத்தியமை மற்றும் நபர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மாலக்க சில்வா...

புதிய அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனஞ் செலுத்த வேண்டியவை!

புதிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இரண்டு விடயங்கள் குறித்து விசேட கவனஞ் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் புதிய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பான விடயங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 638 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் குணமடைந்ததை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2...

லெபனானிற்கு நிவாரணங்களை அனுப்பி வைப்பதற்கு தீர்மானம்!

லெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தை அடுத்து லெபனான் நாட்டிற்கு நிவாரணங்களை அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 200 இற்கும் அதிகமானவர்கள்...