மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பாக விசேட அறிவிப்பு!

- Advertisement -

பாடசாலைகளை மீண்டும் திறக்கும் தினம் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான தினம் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த, கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை கூறினார்.
இதன் அடிப்படையில், ஜூன் மாதம் 29ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரப்பட உள்ளது.
இதன்படி ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும். எனினும், மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.
பாடசாலைகள் 4 கட்டங்களாக திறக்கப்பட உள்ளது.
இதன்படி ஜூலை 6ஆம் திகதி மாணவர்களுக்காக திறக்கப்பட உள்ளது.
இது முதலாவது கட்டம். இதன்போது, தரம் 13, தரம் 11, தரம் 5 ஆகிய வகுப்புகள் ஆரம்பமாகும்.
ஜூலை 20ஆம் திகதி 12 மற்றும் 10 ஆம் வகுப்புகள் ஆரம்பமாகும்.
அத்துடன், ஜூலை 27 ஆம் திகதி 3ஆம் வகுப்பு, 4 ஆம் வகுப்பு, 6 ஆம் வகுப்பு, 7 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்பு ஆகியன ஆரம்பமாகும்.
அத்துடன், உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் அக்டோபர் 2ஆம் திகதி வரை உயர்தர பரீட்சை இடம்பெறும்.
அத்துடன், தரம் 5 பரீட்சை 13ஆம் திகதி செப்டெம்பர் ஞாயிறன்று இடம்பெறும்.
இதேவேளை, இணைய வழிக் கல்வியை எதிரியாக பார்க்க வேண்டாம் எனவும் அமைச்சர் கோரினார்.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம் – ஒருவர் உயிரிழப்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி – பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இன்று காலை இடிந்து வீழ்ந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சுமார் ஒன்றரை...

புத்தளத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கண்காணிப்பு விஜம்

புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றைய தினம் கண்காணிப்பு விஜமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, மதுரங்குளி மற்றும் வாழைச்சேனை தோட்டங்களின் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்து...

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்

கண்டி - பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

ஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  மேற்கொள்ளப்பட்ட  திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்  போதே...

Developed by: SEOGlitz