மலையக மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் நாயகமாக பேராசிரியர் விஜயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு மற்றும் அரசியல் உயர் பீடம் ஆகியவற்றில் ஏகமனதாக இன்றைய தினம் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் ஏ.லோரன்ஸ் தெரிவித்தார்.
முன்னதாக கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராக பேராசிரியர் விஜயசந்திரன் கட்சியின் உயர் பீடத்தினால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அனுஷா சந்திரசேகரன் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டமையினால் அவர் தனது பதவியிலிருந்து விலகியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுயேச்சைக் குழுவொன்றின் தலைமை வேட்பாளராக அனுஷா சந்திரசேகரன் போட்டியிடுவதன் காரணமாக பிரதி செயலாளராக அவர் செயற்படுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் காலம் என்பதனால் செயலாளருடைய சேவைகளைக் கருத்தில் கொண்டு பேராசிரியர் விஜயசந்திரன் பிரதி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.