இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள விரும்புவதாக நேபாள துணை பிரதமர் ஈஷ்வர் பொக்கெரல் (ishwar pokhrel) தெரிவித்துள்ளார்.
நேபாளம் மற்றும் இந்தியா எல்லைகளுக்கு இடையே இருக்கும் மேற்குப்பகுதியின் உரிமை குறித்த இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப்பிரச்சினை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.
இந்த நிலையில் இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்து கொள்ள விரும்புவதாகவும் எல்லையில் படைகளை குவிப்பதற்கு விருப்பமில்லை எனவும் நேபாள நாட்டின் துணை பிரதமர் ஈஷ்வர் பொக்கெரல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவுடனான எல்லைப்பகுதிகளான லிபுலேக் (Lipulekh), லிம்பியாதுரா (Limpiyadhura) மற்றும் கலாபானி (Kalapani) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடமொன்றை நேபாளம் வெளியிட்டுள்ளது.
எனினும் குறித்த வரைப்படத்திற்கு இந்திய மத்திய அரசு எதிர்ப்பை தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.