தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹுல் நீதிமன்றத்தை அவமதிதுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல் பீரிஸ் தெரிவிக்கின்றார்.
பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.ரத்னஜீவன் ஹுலின் கருத்தை அதற்கு காரணமாகும்.சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பொருந்துகின்ற விதத்திலா அவர் செயற்பட்டிருக்கின்றார்.சிங்கள மொழியில் எழுதுகின்ற குப்கைகள் அனைத்தையும் தனக்கு வாசிக்க முடியாது என வடக்கில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சிங்கள மொழியில் எழுதுகின்ற கடிதங்களுக்கு அவர் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.அத்துடன் இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் செயற்பட வேண்டிய முறையில் இல்லை என கூறியுள்ளார்.அது நீதிமன்றத்தை அவமிக்கும் செயல். பேராசிரியர் ரத்னஜீவன் ஹுலின் செயற்பாடு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பொருந்துதா என ஆணைக்குழு நம்புகிறதா?அல்லது அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கை என்ன?