மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

- Advertisement -

எதிர்வரும் ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

- Advertisement -

ஐக்கிய தேசிய கட்சிப் பதவியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறுகின்ற நிலையில், அதற்கு சந்தர்ப்பத்தை வழங்கி தாம் அமைதியான முறையில் வேறு கூட்டமைப்பொன்றை உருவாக்கியதாக அவர் கூறினார்.

எனினும், எதிர்வரும் ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்குப் பின்னர் சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக உறுதியளிப்பதாக சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தாம் அமைதியாக இருந்தாலும், இன்னும் பலமாகவே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியைப் பிரதிநித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தாம் எழுந்தவுடன் யாராலும் அதனை வீழ்த்த முடியாது என ரவி கருணாநாயக்க மேலும் கூறினார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

Developed by: SEOGlitz