மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சர்வதேச ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான போர் கருவிகள்

- Advertisement -

48 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையில் விலங்குகளின் எலும்புக் கூடுகளைப் பயன்படுத்தி வேட்டைக் கருவிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, வில்-அம்பு தொழில்நுட்பத்தை ஆப்பிரிக்காவிற்கு வெளியில் இருந்து மனிதர்கள் பயன்படுத்தியதற்கான மிகப் பழமையான சான்று இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சர்வதேச மற்றும் உள்ளூர் ஆராய்ச்சியாளர்களான அனோயெல்அமானோ, ஒஷான் வேதகே, ஷிரான் தெரனியகல, எம்.எம்.பத்மலால், நிமல் பெரேரா, நிக்கோல் போய்வின், மைக்கேல் டி. பெட்ராக்லியா மற்றும் பேட்ரிக் ரொபர்டிஸ் ஆகியோினால் கடந்த வருடம் முதல் பாஹியங்கல குகையில் ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CNN உள்ளிட்ட பல்வேறு சர்வதேச ஊடகங்களில் இது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.

இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் விலங்குகளின் எலும்புக் கூடுகளைப் பயன்படுத்தி, வேகமாக ஓடக் கூடிய குரங்கு மற்றும் அணில் போன்றவற்றை வேட்டையாடுவதற்கு அம்பு உள்ளிட்ட கருவிகளை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாஹியங்கல குகையில் கண்டெடுக்கப்பட்ட எழும்புக் கூடுகளை அடிப்படையாக வைத்தே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

இலங்கையில் சர்வதேச ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான போர் கருவிகள் 1

இலங்கையில் சர்வதேச ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான போர் கருவிகள் 2இலங்கையில் சர்வதேச ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான போர் கருவிகள் 3

இலங்கையில் சர்வதேச ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான போர் கருவிகள் 4

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்கா – கொரோனா தொற்று குறித்த முழு விபரம்!

அமெரிக்காவில் நேற்றைய நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1 இலட்சத்து எண்ணாயிரத்து 63 க்கும் மேற்பட்டோர் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி அமெரிக்காவில் இதுவரையான காலப்பகுதியில் 1 கோடியே 32 இலட்சத்து 48 ஆயிரத்திற்கும்...

மாவீரர் தினம் குறித்து செய்தி வெளியிட்டோருக்கு நடந்தது என்ன? பொலிஸார் விளக்கம்!

மாவீரர் தினத்தை போற்றும் வகையில், சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த நபர்கள் செங்கலடி பகுதியில் வைத்து, நேற்றைய தினம் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக,...

35 ஆவது பொலிஸ்மா அதிபராக பதவியேற்கின்றார் சி.டி விக்ரமரத்ன!

இலங்கை பொலிஸ் சேவையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக, சி.டி விக்ரமரத்ன இன்றைய தினம் பதவியேற்கவுள்ளார். இதற்கமைய, அவர் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப்...

PCR தொடர்பில் பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில், பல தரப்பினர் PCR பரிசோதனையை தவிர்த்து செயற்படுவதாக பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் தேவேந்திர பெரேரா தெரிவித்துள்ளார். அட்டுலுகம பகுதியில் இதுவரை 164 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக...

பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம்- காரணம் என்ன?

பிரான்ஸில் PARRIS நகரில்  கறுப்பு இனத்தவரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அந்தநாட்டு பொலிஸ் அதிகாரிகள் மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கருப்பினத்தைச் சேர்ந்த இசைத் தயாரிப்பாளர் ஒருவரை PARRIS பொலிஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம், காணொளி...

Developed by: SEOGlitz