மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதி சொகுசு பேருந்துகளின் கட்டண நிர்ணயம் தொடர்பில் ஆலோசனை!

- Advertisement -

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தில் ஈடுபடும் அதி சொகுசு பேருந்துகளின் கட்டண நிர்ணயம் தொடர்பில் உரிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார்.

போக்குவரத்து சேவைகள் மேலான்மை அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தில் ஈடுபடும் அதி சொகுசு பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து அதிகளவான கட்டணம் அறவிடப்படுவதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்த விடயத்தை ஆராய்ந்து பயணிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு வாய்ப்பு இருக்கின்றதா என்பதை ஆறாயுமாரும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது அதிக கட்டணம் வசூலிக்கு பேருந்துகளுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படாது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பயணிகள் சுரண்டப்படுவதை அரசாங்கத்தினால் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் முக்கிய நகரங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்துகளை பயன்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுப்பதுடன், கட்டணம் தொடர்பாக பொது மக்களுடன் கலந்துரையாடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், உயர்தர போக்குவரத்து சேவைகளை நாட்டு மக்களுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமென குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுப்போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதம் ஊடாக வீதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz