மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய பாதுகாப்பு  தொடர்பில்   கேள்வி எழுந்துள்ளது : ஐக்கிய மக்கள் சக்தி!

- Advertisement -

தற்போதைய அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு  தொடர்பில்   கேள்வி எழுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

- Advertisement -

“நாட்டில் உள்ளஒவ்வொரு பிரஜையும் கௌரவமாக வாழ்வதற்கான  சூழ்நிலைஉருவாக்கப்படும் என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாம் ஆட்சிக்கு வரும் போது குறிப்பிட்டிருந்தார்.

தேசிய பாதுகாப்பு  உறுதிப்படுத்தப்பட்டு நாட்டின் ஒவ்வொரு பிரஜையும்சுதந்திரமாக  வாழ்வதற்கான யுகம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று காலை வேளையில்  கொழும்பு சுதந்திர  சதுக்கம் அருகில்  சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக  ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்தது.

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் இவ்வாறான சம்பவங்கள்  எவ்வாறு இடம்பெறகின்றன என்பது தொடர்பில் கேள்விஎழுகின்றது.அதேபோல  முச்சக்கரவண்டி சங்கத்தலைவர்  சுனில் ஜயவர்தன நேற்று முன்தினம்  கொலை  செய்யப்பட்டுள்ளதாகவும்  அறியக்கிடைத்தது.

அரசாங்கம்  ஆட்சிக்கு வரும் போது வழங்கிய வாக்குறுதிகளை உரியநேரத்தில் நிறைவேற்றியிருந்தால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்ற திட்டங்கள் உரிய  நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் முச்சக்கரவண்டிசங்கத்தலைவர்  சுனில் ஜயவர்தன உயிரிழக்க வேண்டியநிலை ஏற்பட்டிருக்காது என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

Developed by: SEOGlitz