முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் 44 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேலும் நான்காயிரத்து 874 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களில் இதுவரையிலான காலப்பகுதியில் 12 ஆயிரத்து 856 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாக ராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்ட மேலும் 271 பேர் இன்று அங்கிருந்து வெளியேற்றப்படவுள்ளதாகவும் ராணுவ ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பி.சி.ஆர் அறிக்கைகளின் பரிந்துரைகளின் பிரகாரமே தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.