மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈ.ரி.ஐ. நிதி நிறுவன முறைகேடுகள் தொடர்பில் மத்திய வங்கியே பொறுப்புக்கூற வேண்டும் : ஜனாதிபதி!

- Advertisement -

ஈ.ரி.ஐ. நிதி நிறுவனம் தொடர்பான முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தது கலந்துரையாடியுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஈ.ரி.ஐ. நிதி நிறுவனமானது  ஆரம்பம் தொடக்கம் முறையாக செயற்படவில்லை என குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிறுவனங்களின் சொத்துக்கள் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை மத்திய வங்கியின் உரிய கண்காணிப்புக்கு உட்படவில்லை எனவும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முறைகேடுகள் தொடர்ல் கண்டறியுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

மக்களின் வைப்புப் பணத்தை உடனடியாக மீளச் செலுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பான பொறுப்பிலிருந்து மத்திய வங்கியினால் விலகிக்கொள்ள முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நிதி நிறுவனமொன்றில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெறுமானால் வைப்பாளர்களை பாதுகாப்பதற்கான கடப்பாட்டினை மத்திய வங்கி கொண்டுள்ளதாகவும் அந்த பொறுப்பினை  மத்திய வங்கி நிறைவேற்றவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

Developed by: SEOGlitz