மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிதியுதவி தொடர்பில் ரணிலின் கருத்தை ஏற்க முடியாது : பவித்ரா!

- Advertisement -

கொவிட் 19 தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு  உலக சுகாதார ஸ்தாபனம்  230  மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து  முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர்  இதனை கூறியுள்ளார்.

- Advertisement -

இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து  1.9 மில்லியன் அமெரிக்க   டொலர் மாத்திரமே பெற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம்  இலங்கைக்கு  230  மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கியுள்ளதாக  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம்   தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த நிதி தொடர்பில் சுகாதார அமைச்சர் அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்  எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எதிர்பாராத வெற்றியை தன்வசப்படுத்தியது Colombo Kings…!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டியில் Colombo Kings அணி 34 ஓட்டங்களினால் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற...

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு – இன்றைய நிலவரம் முழுமையாக…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

Developed by: SEOGlitz