மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிலிப்பைன்ஸில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

- Advertisement -

பிலிப்பைன்ஸில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்த 223 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப் பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸின் மனிலா விமான நிலையத்தில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல். 1423 எனும் சிறப்பு விமானம் ஊடாக  நேற்று இரவு 10.30 இற்கு கட்டுநாயக்க சர்வதேச  விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

- Advertisement -

இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர்களில் பெரும்பாளானவர்கள் பிலிப்பைன் நாட்டுக்கு உயர் கல்வியைத் தொடர்வதற்காகச் சென்ற மாணவர்கள் மற்றும் கப்பல் நிறுவனங்களில் பணிக்ககச் சென்றவர்கள் என வெளியுறவு அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச  விமான நிலையத்தை வந்தடந்த இவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை விமான நிலையத்தை அண்மித்துள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் படி பயணிகள் எவரேனும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டால் அவர் அருகிலுள்ள வைத்தியசாலை அல்லது தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவதுடன், ஏனையவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜப்பான் நாட்டில் இருந்து இன்று அதிகாலை 3.30 இற்கு மற்றுமொரு சிறப்பு விமானம் கட்டுநாயக்க சர்வதேச  விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் செய்த பொறியியலாளர் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா – உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

48 MP Quad AI கெமெரா, 5000mAh மின்கலம், 4GB RAM + 128GB ROM உடன் Huawei Y7a இலங்கையில்

உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது…

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 485 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக...

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் : அமைச்சர் பவித்ரா!

கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களுக்கான பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறிப்பிட்டுள்ளார். வரவு செலவு திட்டத்தின்  மூன்றாவது வாசிப்பு மீதான  மூன்றாம்  நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்...

றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற  உறுப்பினர்  ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச நிதியினை முறைகேடாக பயன்படுத்திய...

Developed by: SEOGlitz