மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று நிலைவரம்!

- Advertisement -

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 877 ஆக  காணப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளான 8 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இவ்வாறு பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான  715 பேர் தொடர்ந்தும்  வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 138பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 97 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 17 பேரும், இரணவில வைத்தியசாலையில் 29 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 96 பேரும், இராணுவ வைத்தியசாலையில் 52 பேரும், ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் 48 பேரும், மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் 47 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் 107 பேரும், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் 95 பேரும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன்  கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 150 ஆக காணப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 28  பேர் நேற்றைய தினம் குணமடைந்தாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு குணமடைந்த 28 பேரும் கடற்படை வீரர்கள் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

குறித்த கடற்படையினருக்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் மூலம், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், குணமடைந்து வீடு திரும்பிய கடற்படையினர் அனைவரும், மேலும் 14 நாட்களுக்கு தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  நாடு முழுவதும்  கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 81 ஆயிரத்து 735 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றின் முதலாவது அலையில் 13...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

Developed by: SEOGlitz