மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஹிந்தவிற்கு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்க சுமந்திரன் ஆதரவு!

- Advertisement -

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“எமது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக நாம் நீண்டதூரம் பயணித்துள்ளோம். இதற்கான நகல்வரைவினை நிறைவிற்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால் அந்தத் தீர்வு எமது அபிலாசைகளை சந்திப்பதாக இருந்தால் நாம் நிச்சயமாக அந்த ஆதரவினைக் கொடுப்போம்.

ஜனாதிபதி நாடாளுமன்றில் உரையாற்றிய பின்னர் நான் இவ்விடயம் குறித்து நாடாளுமன்றில் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். ஜனாதிபதியும் அவரது உரையில் குறித்த சில  மூன்று விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே நாம் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியது இல்லை. இந்த அரசியல் நகல் வரைபினை வைத்தே தேவையான சில மாற்றங்களுடன் எமது பிரச்சினைகளை முடிவிற்குக் கொண்டு வரலாம் என நான் கூறியிருந்தேன்.

சம்பந்தனும் தனது நீண்ட எரையில் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றார்.அண்மையில் பிரதமரைச் சந்தித்தபோதும் நான் இந்த விடயத்தினைத் திரும்பவும் கூறியிருக்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz