மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது : தாய்லாந்து!

- Advertisement -

தாய்லாந்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கச்செயற்பாடுகள் பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டில் புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என அந்த நாட்டு சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிமுறைகளுக்கு அமைவாக தாய்லாந்தில் கட்டுப்பாடுகளுடன்  முடக்கசெயற்பாடுகள்  பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாய்லாந்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அண்மையில் அடையாளம் காணப்பட்ட அனைத்து கொரோனா தொற்றாளர்களும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தந்தவர்கள் எனவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை கடந்த  3 வாரங்களின் பின்னர்  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என தாய்லாந்து அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளம் வெறுமனே வாக்குதியாக மட்டும் இருந்துவிடக்கூடாது – கயந்த கருணாதிலக்க வலியுறுத்தல்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்துள்ள அரசாங்கம் அதனை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர்...

வார இறுதி நாட்களில் ரயில் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

வார இறுதி நாட்களில்  புகையிரத சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புகையிரத சேவைகள் திணைக்களம்  நேற்று  இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவல்  அதிகரித்து வருவதன் காரணமாக இந்தத் திட்டம்...

LPL கிரிக்கெட் திருவிழா – Jaffna Stallions அணி அபார வெற்றி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டியில் Jaffna Stallions அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

கொரோனா உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரிப்பு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதை மை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நான்கு ஆண்கள் மற்றும் நான்கு...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

மேலும் 221 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

Developed by: SEOGlitz