பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீபிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப்புக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனை முடிவுகள் இன்று வெளிவந்த வந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஷெபாஸ் ஷெரீப் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.