மெய்ப்பொருள் காண்பது அறிவு

சஜித் – மஹிந்த டீல் இருக்கின்றதா? – ஆஷூ மாரசிங்க பதில்!

- Advertisement -

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மஹிந்த ராஜபக்ஸவுக்கிடையில் டீலொன்று காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவிக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

- Advertisement -

“மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தலை பகுதி பகுதியாக நடத்தும் போது சஜித் பிரமேதாச கட்சிக்குள் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சர்சைகளை உருவாக்கினார்.

ஆகவே அப்போதைய அரசாங்கத்துடன் இருந்த டீலின் அடிப்படையிலா சஜித் பிரேமதாச இவ்வாறு செயற்பட்டாரா என எண்ணத் தோன்றுகின்றது.

அதே போன்று தற்போது சஜித் பிரேமதாச முன்னெடுப்பதும் அரசாங்கத்தின் டீலாகும். அவர்களுக்கு தான் ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்த வேண்டிய தேவையுள்ளது.

அதனால் தான் 15 வருடங்களுக்கு பின்னரே நமக்கு ஐக்கிய தேசியக் கட்சி தொகுதி அமைப்பாபளர்களினை ஹம்பாதோட்டை மாவட்டத்தில் நிறுத்த முடிந்தது.

தற்போது 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்ததைப் போன்று குழுவொன்றை உருவாக்க முடிந்துள்ளது. தூய்மையானவர்கள் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ளனர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவின் கொரோனா தொற்று குறித்த முழு விபரம்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி ரஷ்யாவில் இன்றைய நாளில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 23ஆயிரத்து 675 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்  507 உயிரிழப்புக்கள்...

தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ள ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷ்யாவுடனான தொடர்புகள் குறித்து அமெரிக்க புலனாய்வுப் பிரிவிடம் உண்மைக்கு புறம்பான  தகவல்களை வெளியிட்டமை தொடர்பாக...

பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் செய்த பொறியியலாளர் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா – உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

48 MP Quad AI கெமெரா, 5000mAh மின்கலம், 4GB RAM + 128GB ROM உடன் Huawei Y7a இலங்கையில்

உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது…

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 485 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக...

Developed by: SEOGlitz