மெய்ப்பொருள் காண்பது அறிவு

மிரிஹான கொலைச் சம்பவத்தில் உரிய விசாரணைகள் வேண்டும் : புத்திக பத்திரண!

- Advertisement -

முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தனவின் கொலை தொடர்பில் வௌிப்படையான விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவிட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

- Advertisement -

“நான் வர்த்தக அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சுனில் ஜயவர்த்தன என்னுடன் நெருக்கமாக செயற்பட்டார். நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

இதனை தனிப்பட்ட பிரச்சினையால் ஏற்பட்ட விடயம் எனக்கூறி இந்த விடயத்தை முடித்து விடக் கூடாது. இவரது கொலை தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இது தொடர்பில் விரிவானதும் வௌிப்படையானதுமான விசாரணையொன்றை அரசாங்கம் முன்னெடுக்க  வேண்டும் என ஜனாதிபதியிடம் கோருகின்றேன்.

ஏனெனில் இந்தக் கொலை ஜனாதிபதியின் சொந்த வீடு அமைந்துள்ள மிரிஹான பொலிஸ் பிரிவிலேயே இடம்பெற்றுள்ளன.

ஆகவே இந்த கொலை தொடர்பில் தனிப்பட்ட ரீதியிலும் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய கடமை ஜனாதிபதிக்கு உண்டு” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு 07 உறுப்பினர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு இளைஞர் விவகார மற்றும்...

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது குறித்து சிங்கப்பூர் நீதி அமைச்சிற்கு விளக்கம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர், சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். சட்ட மா...

மஹர சிறைச்சாலை விவகாரம் : குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைதிகள் உள்ளிட்ட 56 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு...

Developed by: SEOGlitz