மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொறுப்புக்கூறுவது ஜனாதிபதியா – பிரதமாரா? : தலதா கேள்வி!

- Advertisement -

இந்த நாட்டில் தற்போது நடைபெறும் விடயங்களுக்கு பொறுப்பு கூறுவது ஜனாதிபதியா அல்லது பிரதமரா என சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுக்கோரல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“தற்போது நல்லாட்சி இல்லை. ஆனால் அனைத்தையும் செய்து முடிக்க முடியும் என்ற ஜனாதிபதியும், அவருடன் பொறுப்பில் உள்ள அரசாங்கமும் ஆட்சியில் உள்ளது. இதில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

தம்பி ஜனாதிபதி அண்ணா பிரதமர், விசேட ஆலோசகராக மற்றைய தம்பி, பொலிஸ், விவசாயம் போன்றவற்றிக்கு பொறுப்பாக மூத்த அண்ணா, மற்றைய அனைவரும்  ஏனைய பொறுப்புகளில்.

தற்போது அவர்களுக்குள்ளேயே செயற்பாடுகளை முன்னெடுக்க முடியவில்லை. நாங்கள் இரு வேறு கட்சிகளை ஒன்றாக இணைத்துக்கொண்டு ஆட்சியை கொண்டு சென்றோம். நாட்டின் தேவைகளை நிவர்த்தி செய்தோம்.

பாரிய கடனில் இருந்த நாட்டை பெற்று மக்களுக்கு தமது வருமானத்தில் வாழ்க்கை நடத்த வழி சேர்த்தோம். ஆனால் தற்போது நிதியமைச்சரான அண்ணா முன்னெடுக்கும் விடயங்கள் ஜனாதிபதி தம்பிக்கு தெரியாது.

தற்போது நாட்டில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பு கூறுவது ஜனாதிபதியா அல்லது பிரதமரா என கேட்க விரும்புகின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz