மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பான விசேட அறிவிப்பு!

- Advertisement -

கொரோனா பரவல் காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ள போதிலும் மஹாபொல புலமைப் பரிசில் நிதியுதவியை தொடர்ந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மொத்த பல்கலைக்கழக மாணவர் எண்ணிக்கையில் 50 வீதமான 60 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 5 ஆயிரம் வீதம் வழங்க மாதாந்தம் 160 மில்லியன் செலவிடப்படுவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

- Advertisement -

தற்போது 3 மாதங்களாக மஹாபொல புலமைப் பரிசில் நிதியுதவி வழங்கப்படாத போதிலும் மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு அதனை தொடர்ந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மஹாபொல புலமைப் பரிசில் நிதியுதவிக்கான நிதியில் 51 வீதம் மஹாபொல நிதியத்தின் மூலமும் 49 வீதம் திறைசேறி மூலமும் வழங்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, தற்போது இணையத்தளம் மூலமாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அதற்காக மாணவர்கள் எதிர்கொள்ளும் செலவுகளுக்கு ஆதரவாக குறித்த 5 ஆயிரம் ரூபா பெறுமதியான மஹாபொல புலமைப் பரிசில் நிதியுதவி தொடர்ந்து வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz