மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீத்தோட்டமுல்ல அனர்த்தம் : இழப்பீடுகள் வழங்க அமைச்சரவை அனுமதி!

- Advertisement -

கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவில் குப்பை மேடு சரிவு அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு, ஏப்ரல் 14ஆம் திகதி கொலன்னாவை – மீத்தோட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததன் காரணமாக பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.

- Advertisement -

இதன் அடிப்படையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 36 வாகனங்கள் தொடர்பிலான மதிப்பீடுகள் கொழும்பு மாவட்ட மேலதிக செயலாளரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

அந்த குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைவாக, தகுதி பெறும் வாகன உரிமையாளர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படவுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாவீரர் தினம் குறித்து செய்தி வெளியிட்டோருக்கு நடந்தது என்ன? பொலிஸார் விளக்கம்!

மாவீரர் தினத்தை போற்றும் வகையில், சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த நபர்கள் செங்கலடி பகுதியில் வைத்து, நேற்றைய தினம் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக,...

35 ஆவது பொலிஸ்மா அதிபராக பதவியேற்கின்றார் சி.டி விக்ரமரத்ன!

இலங்கை பொலிஸ் சேவையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக, சி.டி விக்ரமரத்ன இன்றைய தினம் பதவியேற்கவுள்ளார். இதற்கமைய, அவர் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப்...

PCR தொடர்பில் பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில், பல தரப்பினர் PCR பரிசோதனையை தவிர்த்து செயற்படுவதாக பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் தேவேந்திர பெரேரா தெரிவித்துள்ளார். அட்டுலுகம பகுதியில் இதுவரை 164 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக...

பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம்- காரணம் என்ன?

பிரான்ஸில் PARRIS நகரில்  கறுப்பு இனத்தவரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அந்தநாட்டு பொலிஸ் அதிகாரிகள் மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கருப்பினத்தைச் சேர்ந்த இசைத் தயாரிப்பாளர் ஒருவரை PARRIS பொலிஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம், காணொளி...

99 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்று நள்ளிரவு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Developed by: SEOGlitz