மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பில் புதிய சிறைச்சாலை ஒன்றை அமைக்கத் தீர்மானம் : நிமல்!

- Advertisement -

மட்டக்களப்பு தொழுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள தீவில் கடும் குற்றவாளிகளை தடுத்துவைப்பதற்கான சிறைச்சாலையொன்றை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை அமைச்சரவையில் முன்வைத்தேன்.

- Advertisement -

மட்டக்களப்பில் அமைந்துள்ள தீவொன்றில் உள்ள தொழுநோய் வைத்தியசாலையில் பாரிய குற்றங்களை மேற்கொள்ளும் கைதிகளுக்கான சிறைச்சாலையினை அமைக்க நாம் தீர்மானித்துள்ளோம்.

அது போன்று மரண தண்டனை வழங்கப் பெற்றவர்களையும் இந்த சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல தீர்மானித்து்ளளோம்.

அதன் பின்னர் அந்த இடத்தில் தொலைபேசி சமிஞ்சைக் கட்டமைப்புக்களை முடக்கவும் நடவடிக்கையெடுக்கவுள்ளோம்.

இதே விடயத்தை நாம் வெலிக்கடை சிறைச்சாலையில் செய்ய முடியாது ஏனெனில் அங்கு அவ்வாறு செய்தால் அருகிலுள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொலைபேசிகள் இயங்காது” என நீதியமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz