மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் தீர்மானம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

- Advertisement -

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இன்று  விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இன்று பிற்பகல் 2 மணியளவில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பல்கலைக்கழகங்களை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பிலான  ஆலோசனைகள் சுகாதார அமைச்சிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய விசேட கூட்டத்தில்  அனைத்து துணைவேந்தர்களும்    கலந்து கொள்ளவுள்ளதாக பல்கலைக்கழக  மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

தம்புள்ளை அணியை திணரடித்த Jaffna Stallions – தொடர் வெற்றி!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது போட்டியில் Jaffna Stallions அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Dambulla Viiking ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியில்...

Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை!

எத்தியோப்பியாவின் Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tigray பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள TPLF கிளர்ச்சியாளர்களின் தலைவர் Debretsion Gebremichael இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அத்துடன், Tigray...

Developed by: SEOGlitz