மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதாரப் பணியாளர்களுக்கு ஐந்து நட்சத்திர விடுதிகளில் விடுமுறையைக் கழிக்க வசதி!

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும்  ஐந்து நட்சத்திர விடுதிகளில் விடுமுறையைக் கழிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி  தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், இது பற்றி ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,   கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு நாட்டிலுள்ள பத்து வைத்தியசாலைகளில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

 இதற்கமைய, இவ்வாறு தங்கியிருந்து சிக்கிச்சை பெறும் நோயாளர்களுக்கு  சரியான முறையில் உணவை வழங்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை,  வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது, பேரணிகளை நடத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு  இடமளிக்க முடியாதென  அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து  தினசரி நிலைமைகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டு மக்கள் பெருமளவில் ஒன்று கூடுவதற்கான சந்தர்ப்பத்தை எம்மால் வழங்க முடியாது.

அவ்வாறு ஏதாவதொரு இடத்தில் பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கும்போது அந்தக் கூட்டத்துக்குள் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இருப்பாராயின்  இந்த நோய் சமூகப்பரவலுக்கு உள்ளாவதற்குரிய சந்தர்ப்பம் ஏற்படும்.

இந்த சூழ்நிலையை சிலர் தவராக பயன்படுத்துவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.  பொது மக்கள் ஒன்றுகூடலில் ஈடுபடுவார்களானால் மீண்டும் நாட்டுக்குள் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக விசேட சுகாதார வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சிலர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி  வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. சிலர் பேரணியை நடத்த முயற்சிக்கின்றனர்.

இவை அனைத்தும் இந்த நாட்டு மக்களின் மீதுள்ள அன்பினால் இடம்பெறுவது இல்லை. நாட்டுக்குள் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.

எனவே, பொது மக்களை இணைத்துக்கொண்டு  வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது, பேரணிகளை நடத்துவது போன்ற நடவடிக்கைகள் இந்த நாட்டு மக்களுக்கு நல்லதல்ல என்பதை  சுகாதார அமைச்சர் என்ற வகையில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz