இலங்கை அணியுடனான டி 20 போட்டிகளில் விளையாடுவதற்கு இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அனுமதியளித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் மூன்று ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், கொரோனா தாக்கம் சற்று குறைவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் அடுத்த மாதம் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
எனினும் இப்போட்டிகள் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோக பூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.