முன்னிலை சோசலிசக் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்டமை தொடர்பில் பிரதமரின் புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ விசாரணையொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தாம் இன்று வௌியிட்டு டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்,
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸ் அதிகாரியொருவரினால் கொலை செய்யப்பட்டமையை கண்டித்து நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன் போது தாக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க சில பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை கொரோனா காலப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட அளப்பரிய பங்களை மழுங்கடிப்பதாக நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வரலாற்று ரீதியான தொல்பொருள் தளங்களை மீளக் கட்டமைக்க மற்றும் முகாமைத்துவம் செய்ய அனைத்து இனத்தினருடனும் ஜனாதிபதி செயலணி இணைந்து செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.