மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழிநுட்பத்துறை வளர்ச்சிக்கு ஜேர்மன் நிதியுதவி!

- Advertisement -

இலங்கையில் தொழிநுட்ப உதவிகளுக்காக ஜேர்மனிய அரசாங்கத்தினால் 11 மில்லியன் யூரோக்கள் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, தொழிற்பயிற்சிக்காக 7 மில்லியன் யூரோக்களும், சிறிய மற்றும் நடுத்தர வணிகத் துறை அபிவிருத்திக்காக 3 தசம் 5 மில்லியன் யூரோக்களும், ஆய்வு மற்றும் நிபுணத்துவ நடவடிக்கைகளுக்காக 5 இலட்சம் யூரோக்களும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தமொன்று இலங்கை அரசாங்கம் மற்றும் ஜேர்மன் அரசாங்கம் ஆகியோருக்கு இடையில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த செயற்றிட்டங்கள் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜேர்மன் அமைப்பு மற்றும் ஜேர்மன் அரசாங்கம் ஆகியவற்றினால் செயற்படுத்தப்பட உள்ளதாகவும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் தொழிற்பயிற்சித் துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறுபட்ட வழிமுறைகளில் ஜேர்மன் அரசாங்கம் உதவி புரிந்துவருவதாக நிதியமைச்சு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நிதியமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஜேர்மன் அரச அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

LPL கிரிக்கெட் திருவிழா – Jaffna Stallions அணி அபார வெற்றி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டியில் Jaffna Stallions அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

கொரோனா உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரிப்பு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதை மை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நான்கு ஆண்கள் மற்றும் நான்கு...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

மேலும் 221 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனாவுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டாலும் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்...

நோர்வூட் பிரதேசத்தில் தீப்பரவல் : 12 குடியிருப்புகள் பாதிப்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிவ்வெளி தொழிற்சாலைப் பிரிவில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீப்பரவலினால் 12 குடியிருப்புகள் எரிந்து போயுள்ளன. இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 இற்கு  இடம்பெற்றதாக எமது பிராந்திய...

Developed by: SEOGlitz