மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய நடைமுறைகள் : ஐ.சி.சி  அறிவிப்பு!

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது, பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் காரணமாக வீரர்களின் பாதுகாப்பை முன்னிட்டு, அனில் கும்ளே தலைமையிலான குழு முன்வைத்த ஆலோசனைகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர், மேற்படி முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமை நிர்வாகிகள் குழு அறிவித்திருக்கிறது.

- Advertisement -

இதன்படி கிரிக்கெட் போட்டிகளின் போது, பந்தின் மீது உமிழ்நீர் இடுவது மற்றும் போட்டிகளில் உள்ளூர் நடுவர்களை நியமிப்பது போன்ற சில தற்காலிக போட்டி ஒழுங்குமுறைகளை திருத்தியமைப்பது தொடர்பாக நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், டெஸ்ட் போட்டியின் போது கொவிட்-19 வைரஸ் அறிகுறி ஏற்படும் வீரர் ஒருவருக்கு பதிலாக மற்றுமொரு வீரரை நடுவர்களால் நியமிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உமிழ்நீர் மூலமாக பந்தினை சுத்தம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், வீரர்கள் பந்தின் மீது உமிழ்நீர் இட்டால், நடுவர்கள் அவர்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்க முடியும் என்பதுடன், குறித்த அணிக்கு நடுவர்களால் எச்சரிக்கை கொடுக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து ஒரு இன்னிங்ஸிற்கு 2 எச்சரிக்கைகள் நடுவர்களால் கொடுக்கப்படுவதுடன், மீண்டும் அந்த தவறிழைக்கப்படுமாயின், துடுப்பெடுத்தாடும் அணிக்கு மேலதிகமாக 5 ஓட்டங்கள் வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச போட்டிகளில் நடுநிலை நாடுகளை சேர்ந்த நடுவர்கள் மாத்திரமே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டினை தற்காலிகமாக நீக்கியுள்ளதுடன், உள்ளூர் நடுவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

கொவிட்-19 காரணமாக சர்வதேச பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதால், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பேரவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வீரர்களின் உடைகளில் அச்சிடப்படும் லோகோக்களுக்கான கடந்தகால விதிமுறைகள் எதிர்வரும் 12 மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளன.

டெஸ்ட் போட்டிகளில் அச்சிடப்படும் மூன்று லோகோக்களை தவிர்த்து, 32 சதுர அங்குலத்துக்கு அதிகமாகாத லோகோ ஒன்றினை வீரர்களின் சீருடைகளில் அச்சிட முடியும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 131 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளமை

காசுமாலை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை…

ஆதித்ய வர்மா படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் அவரது சமூக வளைத்தளங்களில் புதிய புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.  

நீதவான் நீதிமன்றத்தினால் அடைக்கலநாதனுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அவரை நாளை (24) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு...

பிரபல நகைச்சுவை நடிகர் உயிரிழப்பு… சோகத்தில் ஆழ்ந்த சினிமா…

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலாமானார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட இவர் இன்று காலமானார். தமிழ் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013...

Developed by: SEOGlitz