மெய்ப்பொருள் காண்பது அறிவு

வழிப்பாட்டுத் தலங்களை திறப்பது தொடர்பில் விசேட அறிவிப்பு!

- Advertisement -

நாட்டில் உள்ள மத வழிப்பாட்டுத் தலங்கள்  அனைத்தும் எதிர்வரும் 12 ஆம் திகதி மீளவும்  ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 50 பேரை மாத்திரம் உள்ளடக்கிய வகையில் மத வழிபாட்டுத்தலங்களை மீண்டும்  ஆரம்பிப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களுக்கமைய மத வழிப்பாட்டுத்தலங்களில் ஒன்று கூடல்களை நடாத்துவதற்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து தனியார் வகுப்புகளையும் மீளவும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர்  நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை  தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அனைத்து தனியார் வகுப்புகளும் திறக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்டினன் சவேந்திர சில்வா இன்று இந்த  அறிவிப்பை விடுத்துள்ளார். இதன்படி, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

களனிவெளி புகையிரத சேவைகள் பாதிப்பு

கொழும்பு முதல் அவிசாவளை வரையிலான களனிவெளி புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில் சேவையில் இயங்கும் இரு புகையிரதங்களில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரணமாக குறித்த ரயில் போக்குவரத்துக்கள்...

லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி   தலவாக்கலை நகரில் மண்டபம் ஒன்றில் கொண்டாட்ட நிகழ்வுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில்  குறித்த நபர்கள்...

நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன

நாட்டில் தற்போதைய  நிலையில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்   நாடு இன்று பொருளாதார ரீதியில் மிகவும் மோசமான நிலைமையில்  காணப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில்...

தபால் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவை  இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய  கடிதங்கள்  விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

Developed by: SEOGlitz