மெய்ப்பொருள் காண்பது அறிவு

போதியளவு நிதி கிடைத்தும் அரசாங்கம் மக்களுக்கு பயன்படுத்தவில்லை : ரணில்!

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாட்டுக்கு போதியளவு நிதி கிடைத்திருந்தும் அரசாங்கம் அதனை மக்களுக்கு தேவையான விதத்தில் பயன்படுத்தவில்லை என ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக்கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனத்தினால் 200 மில்லியன் டொலர் நிதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. எமது நாட்டின் பெறுமதியில் அது 4200 கோடி ரூபா.

இந்த நிதிக்கு என்ன நேர்ந்தது என சுகாதார அமைச்சரிடம் நான் கேட்க விரும்புகின்றேன். தயவுசெய்து அது தொடர்பாக தரவுகளை வெளிப்படுத்துங்கள். அரசாங்கத்தினால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முன்னெடுத்து செல்லும் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருந்தன.

நாட்டில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க நாம் கோரிக்கை விடுதிருந்தோம். இதனை நாங்கள் நாட்டு மக்களுக்காகவே முன்னெடுக்குமாறு கோரியிருந்தோம். ஆனால் அதற்கான நிதி போதியளவில் இருந்தும் அரசாங்கம் அதனை செய்யவில்லை.

20 மில்லியன் முககவசங்கள் நாட்டுக்கு கொண்டுவந்திருக்க முடியும். நாட்டில் அனைத்து மக்களுக்கும் அதனை பகிர்ந்தளித்திருக்க முடியும். ஒருநாளைக்கு 10 ஆயிரம் பரிசோதனைகளை முன்னெடுக்க இயந்திரங்களை கொண்டுவந்திருக்க முடியும்.

கொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் முகாம்களை மேலும் வசதிமிக்கதாக அமைத்திருக்க முடியும். சுகாதாரத்துறை மற்றும் இராணுவத்தினருக்கு பயிற்சிகளை பெற்றுக்கொடுத்திருக்க முடியும் .

அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யாததன் காரணமாகவே கடற்படையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவ்வாறு எந்தவோரு பயனுள்ள விடயத்தையும் அரசாங்கம் முன்னெடுத்திருக்க வில்லை” என ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் பொலிஸாரினால் சேகரிப்பு!

வடக்கு - கிழக்கின் சில பகுதிகளில் நேற்றையதினம் ஹர்த்தால் இடம்பெற்ற நிலையில் வவுனியாவில் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளன. இதற்கமைய, பொலிசார் பாடசாலை அதிபர்களை தொடர்பு கொண்டு, பாடசாலைக்கு சமூகமளித்த...

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

Developed by: SEOGlitz