எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
மேலும், தாம் இன்று முதல் அரசியிலில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக எதிர்வரும் தேர்தலில் தமக்கான விருப்பு வாக்குகளை அளிக்க வேண்டாமென மங்கள சமரவீர வாக்களர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கைகள் நடைமுறைப்படுத்தபடவேண்டுமெனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.