ஆரம்ப பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த திட்டத்தை பிரித்தானியா கைவிட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா தொற்றுப் பரவல் குறைவடைந்து வரும் நிலையில், ஆரம்ப பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த திட்டத்தை அந்த நாட்டு அரசாங்கம் கைவிட்டுள்ளது.
பிரித்தானியாவில் கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் 4 வாரங்களுக்கு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பிள்ளைகளின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு குறித்த திட்டத்தினை கைவிட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பிரித்தானியாவில் மேல்நிலைப் பாடசாலைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை திறக்கப்பட மாட்டாது என அந்த நாட்டு சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.