மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் கொரோனாவால் பலர் இறந்திருப்பர் : அமைச்சர் டக்ளஸ்!

- Advertisement -

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பல உயிர்களை இழந்திருக்க வேண்டியிருக்குமென  கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா, வாடி வீட்டில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்வடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நல்லாட்சி இருந்திருந்தால் பல பேர் இறக்க வேண்டியிருக்கும். ஆனால் அதிஸ்டவசமாக ஆட்சி மாறியபடியால் பெரியளவிலான உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல மக்களது பொருளாதாரம், வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு ஒரு தேர்தல் அவசியமாக இருக்கிறது.

அந்தவகையில் சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு அவர்களது வழிகாட்டலை கருத்தில் எடுத்து ஒரு தேர்தலுக்கு செல்ல வேண்டும்.
அதனை மக்கள் விளங்கி வருகிறார்கள். மக்கள் வறுமை, பொருளாதாரம் பற்றி பேசுகிறார்கள்.

அதில் இருந்து விடுபட வேண்டுமாக இருந்தால் தேர்தல் நடந்து நாடாளுமன்றம் கூட்டம்பட வேண்டும். இலங்கையைப் பொறுத்த வரை சமூக பரவலாக கொரோனா இல்லை. அதனை மக்கள் விளங்கிக் கொள்வார்கள் என நினைக்கின்றேன்.

இதுவரை சந்தித்த மக்களைப் பார்த்தால் ஆரம்பத்தில் கொரோனா சம்மந்தமான தெளிவு இல்லாமல் இருந்தது. பின்னர் தெளிவு ஏற்பட்டது. பின்வாங்கல் இருந்தது. தற்போது இந்த சூழலுக்குள் வாழப் பழகிக் கொண்டுள்ளார்கள்.

ஆனாலும் விரைவில் அதில் இருந்து வெளியில் வர முடியும். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உடனடியாக அல்லது விரைவாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டிய சட்ட தேவை மாத்திரமல்ல ஒரு யதார்த்த தேவை இருக்கிறது.

அந்தவகையில் அரசாங்கம் விரைவான ஒரு தேர்தலை நடத்தவேண்டியுள்ளது.
பாதிப்புக்களில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டுமாகவிருந்தால் நாடாளுமன்றம் ஒன்றை விரைவில் கூட வேண்டிய தேவை இருக்கிறது” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவும்! மக்களுக்கு எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு,...

பேசுவதற்கு பேச்சுமில்லை சொல்வதற்கு வார்த்தையுமில்லை: இளையராஜா!

தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜா "கந்தர்வர்களுக்காக பாட போய் விட்டீரா?" எனக்கூறி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். https://www.facebook.com/Ilaiyaraaja/posts/3551745441536644

இந்தியாவில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 7 ஆயிரம் பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 957 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை  இந்தியாவில்...

20 ஆவது திருத்தத்திற்கு எதிராக 6 மனுக்கள் தாக்கல்!

நாடாளுமன்றித்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த  சட்டமூல வரைபிற்கு எதிராக மேலும் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த, மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, 20  ஆவது அரசியலமைப்பு திருத்த...

20 ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்களை ஆராயும் குழு நியமனம்!

20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த குழு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புவகேன அலுவிகாரே,...

Developed by: SEOGlitz