தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு புதிய ஆறு மாத ஒப்பந்தத்தை இலங்கை கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது.
குறித்த ஒப்பந்தம் 2020 மே 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தங்களில் 20 தேசிய வீராங்கனைகளும், 15 வளர்ந்து வரும் வீராங்கனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஏ, பி, சி மற்றும் டி ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதுடன், குறித்த வீராங்கனைகளுக்கு ஒரு மாத நிலையான தொகையும் வருகைக் கொடுப்பனவும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் செய்யப்பட்ட குறித்த வீராங்கனைகள் அனைவரும் அவர்களது தகுதி, செயல்திறன், மற்றும் தேசிய அணிக்கான எதிர்கால தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய மகளிர் தெரிவுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட வீராங்கனைகளின் பெயர் விபரங்கள் இலங்கை கிரிக்கெட் சபையினது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.