மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிதாக எவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை : நியூஸிலாந்து அறிவிப்பு!

- Advertisement -

இறுதியாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் முழுமையாக குணமடைந்து தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் புதிதாக எவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லையென நியூஸிலாந்தின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரத்துறையினரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விளையாட்டரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது, சன நெரிசல் மிக்க நிகழ்ச்சிகளை நடத்துவது, விமானங்களில் விதிக்கப்பட்டிருந்த இருக்கை கட்டுப்பாடு ஆகியவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நியூஸிலாந்தின் கடந்த 17 நாட்களாக எந்தவொரு கொரோனா வைரஸ் தொற்றாளரும் உறுதிசெய்யப்படவில்லை.

இந்த நிலையிலேயே,  நாட்டின் அனைத்து கட்டுப்பாடுகளையும்  நியூஸிலாந்து அரசாங்கம்  நீக்கியுள்ளது.

இதேவேளை, நியூஸிலாந்தில் ஆயிரத்து 504 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், 22 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...

மேல் மாகாணத்தில் நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள் குறித்த விபரம்

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் மீண்டும்…

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன்,...

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகள் இதோ!

நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை...

நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 349 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

Developed by: SEOGlitz