ஆபிரிக்க அமெரிக்கரான George Floyd கொலை சம்பத்தில் குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு 1.25 மில்லியன் அமெரிக்க டொலர் ரொக்கப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் காவலில் உயிரிழந்த ஆபிரிக்க அமெரிக்கரான George Floyd இன் கொலை வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இவ்வாறு ரொக்கப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியின் பிணைத் தொகை ஒரு மில்லியனில் இருந்து 1.25 மில்லியனாக உயர்வடைவதற்கு குற்றத்தின் தீவிரம் மற்றும் மக்கள் போராட்டம் ஆகியவையே காரணம் என வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், George Floyd கொலை சம்பத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மூவரும் கொலைக்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.