மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவில் கறுப்பினத்தவரின் கொலைக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்!

- Advertisement -

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான George Floyd பொலிஸாரினால் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவின் லண்டன் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆரப்பாட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்குபற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன வெறிக்கான George Floyd இன் மரணம் குறித்து சர்வதேச ரீதியில் ஆர்ப்பாட்டங்களும் விமர்சனங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் லண்டனில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

- Advertisement -

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது முகக்கவசங்களில் எழுதப்பட்ட இனவெறிக்கு எதிரான கோஷங்கள் மூலமாக மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவும் அச்சுறுத்தல் தொடர்ந்தும் உள்ள நிலையில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்று கூடுதல்களை தவிர்க்குமாறு அந்த நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கறுப்பினத்தவரின் கொலைக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

விடுதலைப்புலி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை..!

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய, வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில், சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக, இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...

இலங்கையில் தடுப்பூசி வழங்குவதில் உள்ள பின்னணி – இரண்டு வயது குழந்தைக்கும் தடுப்பூசி..!

நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. BBC செய்தி சேவையினால் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி...

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும், கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள...

பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடர் அதிரடியாக ஒத்திவைப்பு!

பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடர் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்றுள்ள 7 வீரர்களுக்கு...

இலங்கையில் மற்றுமொரு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு, தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. அவசர பாவனைக்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Developed by: SEOGlitz