கிரிக்கட் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்டவீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் 5 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் பந்து வீச்சாளரும் ஆன வசிம் அக்ரம் இதனை அறிவித்துள்ளார்.
கிரிக்கட் போட்டிகளில் சிறப்பான 5 துடுப்பாட்ட வீரர்களை வரிசைப்படுத்துமாறு காணொளியூடாக இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில்அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தனது பட்டியலில் முதலிடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் , நியூசிலாந்து அணியின் மார்ட்டின் குரோவ் 2-வது இடத்திலும் பிரையன் லாரா 3-வது இடத்திலும் , இன்சமாம் உல்-ஹக் 4-வது இடத்திலும் சச்சின் டெண்டுல்கர் 5-வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.