மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.தே.க. சார்பில் இளம் வேட்பாளர்களைக் களமிறக்குவோம் : ரவி கருணாநாயக்க!

- Advertisement -

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் ஆணையை நிறைவேற்றக்கூடிய இளம் வேட்பாளர்கள் பலர்  ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

- Advertisement -

“எந்தவொரு அரசியல் கட்சியிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே பிரச்சினைகளுக்கு  தீர்வினை முன்வைத்து நம்பகத்தன்மையை  மேலும் அதிகரித்து   ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளது.

டட்லி,  டீ.எஸ் , ஜே. ஆர் போன்ற முன்னணித் தலைவர்களின்  வழிகாட்டல்களைன் பின்பற்றி ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் பயணிக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சியாகும் எனவே இளம் புதிய முகங்களுடன் தேர்தலை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுக்கள் இரண்டாவது நாளாக இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தறவு...

தொழில் பெற்றுத்தருவதாக மோசடி – நீதி அமைச்சர் விடுத்துள்ள அதிரடி பணிப்புரை..!

தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்யுமாறு நீதி  அமைச்சர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். நீதி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியினால் நியமனம்..!

நான்கு நாடுகளுக்கான புதிய தூதுவர்கள்  இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று முற்பகல் புதிய தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர். கொரியக்...

புதிய வரவுசெலவு திட்டம் – அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது..!

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் நவம்பர்...

கல்விசார் சமூகத்திற்கு அங்கஜன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..!

நாட்டில் எதிர்காலத்தில் கல்விசார் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார். கொழும்பு இந்து கல்லூரியில் இன்று...

Developed by: SEOGlitz