மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்சியின் யாப்பிற்கு அமைவாக நான் நீக்கப்படவில்லை : அனுஷியா சந்திரசேகரன் குற்றச்சாட்டு!

- Advertisement -

கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அனுஷியா சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணிக்கு ஒருபோதும் சவாலாக இருக்கமாட்டார் என கட்சியின் பொதுச் செயலாளர் அ.லோறன்ஸ் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் எதிர்கால தேர்தல் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.

- Advertisement -

இதன்போது, கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதிசெயலாளர் நாயகமாக செயற்பட்ட அனுஷியா சந்திரசேகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துரைத்த போதே, கட்சியின் பொதுச் செயலாளர் அ.லோறன்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.

“மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான அமரர் சந்திரசேகரனின் மறைவுக்கு பின் அவரை கௌரவப்படுத்தும் வகையில் அனுசா சந்திரசேகரன் அவர்களுக்கு பிரதிசெயலாளர் நாயகம் பதவியினை வழங்கினோம்.

ஆனால் அவருடைய சுயநலத்திற்காக அவர் கட்சியின் விதிமுறைகளை மீறி செயற்பட்டதன் காரணமாக அவரை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம்.

அவருக்குப் பதிலாக பேராசிரியரும் மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினருமான பேராசிரியர் விஜயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இவ்விடயம் தொடர்பாக அனுஷா சந்திரசேகரன் கருத்துத் தொிவிக்கையில், “மலையக மக்கள் முன்னணிக் கட்சியின் யாப்பிற்கு அமைவாக நான் நீக்கப்படவில்லை. இன்றளவும் நானே பிரதிப் பொதுச் செயலாளராக தொடர்ந்தும் இருக்கின்றேன்.

நான் பதவியில் இருக்கும்போதே இன்னுமொருவரை நியமித்தமை தொடர்பாக வேண்டுமானால் நான் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறான நடவடிக்கைகள் சட்டத்தரணியான என்னையோ எனது அரசியல் பயணத்தையோ என்றைக்கும் பின்னடையச் செய்யாது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் நான் தனித்துக் களமிறங்குவது உறுதி” என அனுஷியா சந்திரசேகரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

பெருமளவிலான கழிவுத் தேயிலை கைப்பற்றல்!

எல்பிட்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. ரத்கம பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. காலி - எல்பிட்டிய இணிகொடவல பிரதேசத்தில்...

Developed by: SEOGlitz