மெய்ப்பொருள் காண்பது அறிவு

போக்குவரத்து நெருக்கடி காணப்படும் பிரதேசங்களில் புதிய போக்குவரத்து நடைமுறை!

- Advertisement -

கொழும்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடி காணப்படும் பிரதேசங்களில் பேருந்து முன்னுரிமைப்பாதை நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு குறித்த சிரேஷ்ட அதிகாரி இந்திக ஹப்புகொட இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

2015ஆம் ஆண்டுமுதல் நடைமுறையில் உள்ள இந்த செயற்றிட்டம், கொரோனா தொற்று பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு இந்த செயற்றிட்டம் குறித்து சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படும் எனவும், எதிர்வரும் 22ஆம் திகதி முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மொறட்டுவை முதல் இரத்மலானை வரையிலும், தெஹிவளை   மற்றும்  சவோய் திரையரங்கு முதல் கொள்ளுபிட்டி தர்மபால மாவத்தை, கொம்பனிவீதி, குமாரரத்னம் வீதி, றீகல் முதல் புறக்கோட்டை வரையிலும், பேருந்து முன்னுரிமைப்பாதை நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.

காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், இந்த பேருந்து முன்னுரிமைப்பாதை நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.

இதேவேளை, பேருந்து முன்னுரிமைப்பாதைக்குள், பேருந்துகளுக்கு மாத்திரம்  உரிய நேரத்தில் அனுமதி வழங்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு குறித்த சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்படி, 20 ஆசனங்களுக்கு அதிகமான அலுவலக வாகன சேவை, பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து மற்றும் வான் ஆகியனவற்றுக்கு மட்டுமே பேருந்து முன்னுரிமைப் பாதைக்குள், பயணிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் சடுதியாக அதிகரித்த உயிரிழப்புக்கள்!

கொரோனா தொற்றினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 428 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து...

சுகாதார வழிமுறைகளுடன் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானம் : பிரதி சபாநாயகர்!

கொரோனா தொற்று குறித்த உரிய சுகாதார வழிமுறைகளை கையாண்டு நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பது குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சி...

வவுனியாவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருத்துவ கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்கள் மூவர்...

புலமைப் பரிசில் பரீட்சை மூலம் பாடசாலை அனுமதிக்குத் தடை? : அமைச்சர் பந்துல!

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை மையமாகக் கொண்டு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறை குறித்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Developed by: SEOGlitz