வட ஆப்பிரிக்காவின் அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டினது பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி (Florence Parly) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளளார்.
மாலி நாட்டில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் வட ஆப்பிரிக்க அல்கொய்தா தலைவர் அப்துல்மாலிக் டுரூக்டெல் என்பவரே கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துக்கு வட ஆப்பிரிக்காவில் தலைவராக திகழ்ந்து வந்த 50 வயதான அப்துல்மாலிக் வட ஆப்பிரிக்காவில் உள்ள அல்கொய்தாவின் துணை அமைப்புக்களுக்குப் பொறுப்பாக இருந்ததாகவும் பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் அப்துல் மாலிக் தனது சகாக்களுடன் இருந்த இடம் இலக்கு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அப்துல்மாலிக் கொல்லப்பட்டமை இன்று உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படுவதாக பிரான்ஸ் நாட்டினது பாதுகாப்புத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.