பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதித் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலை மாணவர்களினதும் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டு, சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இதுவரை சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத பயனாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு பயனாளர்களிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், இது தொடர்பான மேலதிக விபரங்களை, கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் போஷாக்கு பிரிவின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.
இதன் அடிப்படையில், 0112 784 163, 0112 784 872 மற்றும் 0113 641 555 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என, கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.