கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 50 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்னர்.
இதனை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு குணமடைந்தவர்களில் 488 பேர் கடற்படை வீரர்கள் உள்ளடங்குவதாக கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 35 பேர் இன்று குணமடைந்ததை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 814 ஆக காணப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 862 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 144 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 93 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 42 பேரும், இரணவில வைத்தியசாலையில் 50 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 79 பேரும், இராணுவ வைத்தியசாலையில் 123 பேரும், ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் 85 பேரும், மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் 38 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் 108 பேரும், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் 96 பேரும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 70 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், நாடுமுழுவதும் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 75 ஆயிரத்து 239 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம், ஆயிரத்து 243 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் 13 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் ஆயிரத்து 506 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 892 பேரும், வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட 523 பேரும், ஏனைய 91 பேரும் குறித்த காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னர் சமூகத்தில் இருந்து எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்