மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தடுப்பு – அரசாங்கம் எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படவில்லை : ரணில்!

- Advertisement -

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அரசாங்கம் எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படவில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

காலி மாட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது அனுபவங்களை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாட்டிற்காக பணியாற்றுவதற்கான வாய்ப்பை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து கடுமையான பிரச்சினைகள் எழுந்துள்ளதுடன், குறித்த தடுப்பு நடவடிக்கைகளில் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டது.

கொரோனா தொற்றுநோயைச் சமாளிக்க தேவையான ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.

எதிர்க்கட்சிகள் மற்றும் சுகாதார நிபுணர்களின் கருத்துக்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளதால் நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும், முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்தத் தவறியதால் அரசாங்கம் நீண்ட காலமாகச் செயற்படாத நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலைமை காரணமாக பலர் வருமானம் இழந்துள்ளனர். இவ்வாறான நிலைமையினால் அரசாங்கம் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

போதுமான எச்சரிக்கை இருந்தபோதிலும் முகமூடிகள் மற்றும் தேவையான சுகாதார உபகரணங்களை விநியோகிப்பதில் அரசாங்கம் தவறிழைத்துள்ளது” என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...

மேல் மாகாணத்தில் நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள் குறித்த விபரம்

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் மீண்டும்…

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன்,...

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகள் இதோ!

நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை...

நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 349 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

Developed by: SEOGlitz