மெய்ப்பொருள் காண்பது அறிவு

கஞ்சிபானை இம்ரானின் சிறைக்கூடத்தில் இருந்து இலத்திரனியல் சாதனங்கள் மீட்பு!

- Advertisement -

பாதாள உலக குழுவின் தலைவர் கஞ்ஜிப்பானை இம்ரான் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பூஸ்ஸ சிறைச்சாலையில் விசேட அதிரடி படையினரால் சோதனை நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இதன்போது, கஞ்ஜிப்பானை இம்ரான் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திலும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கஞ்ஜிப்பானை இம்ரான் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தின் கூறையில்  மறைத்து வைக்கபப்டிருந்த தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில இலத்திரனியல் உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் ஊடாக முன்னெடுக்கப்படும் பாதால உலக குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு அமைவாக விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேல்மாகாண பாடசாலைகள் மீள திறப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை மீள திறப்பது குறித்த தீர்மானம் இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் இன்று இதற்கான தீர்மானம் மிக்க கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மேலும்,...

கொழும்பில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 130 தொற்றாளர்கள் அடையாளம்!

கொழும்பு மாவட்டத்தில் மேலும் 130 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நேற்றைய நாளில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாக பகுதியாக கொழும்பு காணப்படுகின்றது. கொழும்பு மாவட்த்தில், நாரயேன்பிட்டிய பகுதியில் 26 பேரும், மருதானை பகுதியில்...

பங்களாதேஷ் – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று இடம்பெறவுள்ளது. 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்தியத்...

கொரோனா தொற்றின் தற்போதைய முழு விபரம் உள்ளே…!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 669 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பேலியகொடை கொரோனா...

கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற நபர் கண்டுபிடிப்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புனானை கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற நபரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நபரை ஏலியகொடை பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Developed by: SEOGlitz